உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தை திறந்து வைத்த இ.பி.எஸ்.,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தை திறந்து வைத்த இ.பி.எஸ்.,

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலுார் ஹவுசிங் போர்டு பகு-தியில், மேற்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் புதிதாக கட்டப்-பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மற்றும் தர்மபுரி மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தியதுடன், 40 அடி உயர கம்பத்தில், கட்சி கொடியை ஏற்றி பேசும்போது, ஓசூர் தொகுதியை, அ.தி.மு.க.,வின் கோட்டை என நிரூபிக்க, கேட்டுக்-கொண்டார்.தொடர்ந்து, மதன்குமார், கானா சுதாகர், மனோகரன், கவி, சீனி-வாசன் ஆகியோர் எழுதிய எடப்பாடியார் எழுச்சி பாடல்கள் சி.டி.,யை, இ.பி.எஸ்., வெளியிட்டார். பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பன்-னீர்செல்வம், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெக-தீசன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், கவுன்சிலர் குபேரன், பகுதி செயலாளர்கள் ராஜூ, வாசுதேவன், மஞ்சுநாத், அசோகா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட பொருளாளர் திம்மராஜ், கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜெயபால், மத்திய ஒன்றிய செயலாளர் முனிரெட்டி, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர் ராமமூர்த்தி, செயலாளர் நாகேஷ், தேன்கனிக்-கோட்டை பேரூர் செயலாளர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்-றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !