உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரிக்கு இ.பி.எஸ்., வருகை அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

கிருஷ்ணகிரிக்கு இ.பி.எஸ்., வருகை அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

கிருஷ்ணகிரி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., அடுத்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, கிருஷ்ணகிரியில், சிறுபான்மை நலப்பிரிவு சார்பில், மாவட்ட செயலாளர் மக்பூல் தலைமையிலும், அம்மா பேரவை சார்பில், மாவட்ட செயலாளர் மாதையன் தலைமையிலும் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். வரும், 2026ல் சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய, 3 தொகுதிகளில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி தலைமையில், அதிக ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெறவும், வரும் தேர்தலில், இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி அமையவும் அயராது உழைக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் கொலை, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றை தடுக்கத்தவறிய, தி.மு.க., அரசை வன்மையாக கண்டிப்பது, என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன், காவேரிப்பட்டணம் நகர செயலாளர் பாருக், அம்மா பேரவை மாவட்ட தலைவர் தங்கமுத்து, இணை செயலாளர் வெற்றிச்செல்வம், பொருளாளர் கோபி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை