உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரிக்கு நாளை இ.பி.எஸ்., வருகை; அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரிக்கு நாளை இ.பி.எஸ்., வருகை; அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரிக்கு நாளை (நவ.14) அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வருகை தர உள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த, ஆலோசனை கூட்டம், ஓசூரில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது. பகுதி செயலாளர் ராஜி வரவேற்றார். எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ், பகுதி செயலாளர்கள் வாசுதேவன், அசோகா, மஞ்சுநாத் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு, பேனர்கள், பத்திரிகைகளில் விளம்பரங்கள் மற்றும் கட்சிக்கொடிகள் கட்டி, உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அதற்காக, மேற்கு மாவட்டத்திலிருந்து, பெரும் திரளாக கிருஷ்ணகிரிக்கு செல்ல கேட்டுக் கொண்டார். மாவட்ட துணை செயலாளர் மதன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் பாபு வெங்கடாசலம், ஹரிஸ்ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை