மேலும் செய்திகள்
காணொலியில் தி.மு.க., ஆலோசனை கூட்டம்
01-Sep-2025
கிருஷ்ணகிரி, சமூக நீதியை நிலைநாட்ட, வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என, மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், ஈ.வெ.ரா.,வின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில், அவரது படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் பேசுகையில், “பெண்ணுரிமை, ஜாதிய வேற்றுமைகளை ஒழித்து, கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி சமூக நீதியை உருவாக்கியவர் ஈ.வெ.ரா., அவரது பிறந்தநாளில் அவர் வழியில் நின்று தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும், தி.மு.க.,வை மீண்டும் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்,” என்றார்.மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், நகர செயலாளர்கள் அஸ்லம், வேலுமணி, இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன், துணை அமைப்பாளர் மகேந்திரன் நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.* ஓசூரிலுள்ள மேற்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் மாநகர மேயர் சத்யா ஆகியோர் தலைமையில், ஈ.வெ.ரா., உருவ படத்திற்கு, கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் மாணிக்கவாசகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
01-Sep-2025