உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உடல்நலக்குறைவால் இறந்த சிறுவனின் கண்கள் தானம்

உடல்நலக்குறைவால் இறந்த சிறுவனின் கண்கள் தானம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பாரத கோவிலை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி ஜமுனா. இவர்களின் மகன் கோவில்கனி, 8. உடல் நலக்குறைவால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த, 21ல், அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சிறுவனின், 2 கண்களை தானமாக வழங்க, பெற்றோர் முன் வந்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் கண் பிரிவு சிகிச்சை பேராசிரியர் டாக்டர் சுதாகர் தலைமையிலான குழுவினர் கோவில்கனியின், 2 கண்களை பெற்று, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ