உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லிப்ட் தலையில் அழுத்தி பண்ணை தொழிலாளி பலி

லிப்ட் தலையில் அழுத்தி பண்ணை தொழிலாளி பலி

கெலமங்கலம், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தல்சூரை சேர்ந்த சீனிவாஸ், 42. ஓசூர் அடுத்த கோபனப்பள்ளி அருகே கூலிசந்திரம் பகுதியில் செயல்படும், கோழித்தீவன ஆலையில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை, 4:30 மணிக்கு பணியில் இருந்தபோது, கோழி தீவன மூலப்பொருட்களை லிப்ட் மூலமாக, மேல் பகுதிக்கு ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சீனிவாஸ், துடைப்பம் கீழே விழுந்ததால் அதை எடுக்க முயன்றார். அந்த நேரத்தில் லிப்ட் அவர் தலை மீது அழுத்தியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி சுனந்தா, 40, புகார்படி, கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை