விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் (பொறுப்பு) தனஞ்செயன் தலைமை வகித்து, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்று கொண்டு, உரிய அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.