உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

ஓசூர், ஓசூர், ரங்கோபண்டித அக்ரஹாரம் வருவாய் கிராமத்தில், நிலமற்ற விவசாயிகள், 15 பேரின் குடும்பங்களுக்கும், மாற்றுத்திறனாளி முனிராஜ் என்பவரது தாய்க்கும், 1997ம் ஆண்டு வழங்கப்பட்ட நிலத்தை விற்கவோ, வாங்கவோ சட்டப்படி உரிமை இல்லை. ஆனால், மோசடி ஆவணங்கள் தயார் செய்து, சட்டத்திற்கு புறம்பாக இருவர், போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதை கண்டித்தும், இனாம் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும், ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன், மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது.வட்ட தலைவர் ராஜாரெட்டி தலைமை வகித்தார். செயலாளர் முனிராஜ் முன்னிலை வகித்தார். சப்-கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சாலையில் அமர்ந்து, போராட்டம் தொடர்ந்தது. மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ் உட்பட பலர் கண்டன உரையாற்றினர். ஓசூர், சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்காமல் செல்ல மாட்டோம் எனக்கூறி, இரவு வரை போராட்டம் தொடர்ந்து நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை