உள்ளூர் செய்திகள்

விவசாயி மர்மச்சாவு

அஞ்செட்டி:வீட்டிற்குள் மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்த நிலையில், சாவில் சந்தேகம் உள்ளதாக, அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வண்ணாத்திப்பட்டியை சேர்ந்தவர் மாது. இவரது மகன் நஞ்சப்பன், 34; விவசாயி. திருமணமாகாத நிலையில், தன் தந்தையிடமிருந்து குறிப்பிட்ட அளவு நிலத்தை வாங்கி கொண்டு, தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, நஞ்சப்பன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். மாது புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை