உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / யானைகளால் தொடரும் பயிர் சேதம் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

யானைகளால் தொடரும் பயிர் சேதம் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஓசூர்: கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அக்.,ல் வெளியேறும், 150க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டு, வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், யானைகள் தாக்கி விவசா-யிகள், பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். யானைகளை கட்டுப்ப-டுத்த அரசு மற்றும் வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க-வில்லை என்றும், சேதமாகும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு தரு-வதில்லை எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தேன்கனிக்கோட்டை தாலுகா விவசாயிகள், 200க்கும் மேற்-பட்டோர் திரண்டு, தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன் அஞ்செட்டி சாலையில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். ஜெக்கேரி பஞ்., முன்னாள் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க, மேற்கு மாவட்ட தலைவர் கணேஷ்ரெட்டி, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், கோரிக்கை குறித்து பேசினர். யானைகளால் சேதமாகும் பயிர்களுக்கு ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய், உயிர் சேதம் ஏற்பட்டால், 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். இறந்த நபரின் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். யானைகளால் பயிர்கள் சேதமான-வுடன், வி.ஏ.ஓ., மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டு உடனடி-யாக, இழப்பீட்டை வழங்க வேண்டும். விளைநிலங்களுக்கு யானைகள் வராமல் தடுக்க வேண்டும் என்பன போன்ற பல்-வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, துணை தாசில்தார் சுபா-ஷினியிடம் விவசாயிகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை