ஓசூர் வனக்கோட்டத்தில் 100 யானைகள் முகாம் தினமும் பயிர்கள் சேதத்தால் விவசாயிகள் வேதனை
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் முகாமிட்டுள்ள, 100க்கும் மேற்பட்ட யானைகளால் தினமும், பயிர்கள் நாசமாவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா தேசிய பூங்காவிலிருந்து கடந்த அக்.,ல் தமிழக எல்லையான ஓசூர் வனக்கோட்டத்திற்கு, 150க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்தன. அதில், 45 யானைகள் கர்நாடகாவிற்கு விரட்டப்பட்டன. மீதமுள்ள, 100க்கும் மேற்பட்ட யானைகள், ஓசூர் வனச்சரகம், சானமாவு காப்புக்காட்டில், 13 ம், போடூர்பள்ளம் வனப்பகுதியில், 12, ராயக்கோட்டை வனச்சரகத்தில், 20, தேன்கனிக்கோட்டை வனச்ச-ரகத்தில், 20, மற்றும் ஜவளகிரி வனச்சரகத்தில், 40 க்கும் மேற்-பட்ட யானைகளும் உள்ளன.அவை, இரவில் வனத்தை விட்டு வெளியேறி, அருகே வனத்தை-யொட்டிய கிராமங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.நேற்று முன்தினம் இரவு சானமாவு காப்புக்காட்டிலிருந்து வெளி-யேறிய, 13 க்கும் மேற்பட்ட யானைகள், அப்பகுதி விவசாயி வெங்கடேஷ் என்பவரது தோட்டத்திலுள்ள, 13 தென்னங்கன்று மற்றும் 3 பப்பாளி மரங்களை சேதப்படுத்தின. ராயக்கோட்டை வனச்சரகம், ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிலிருந்து வெளியேறிய, 8க்கும் மேற்பட்ட யானைகள், யு புரம் அருகே, விவசாயி தேவ-ராஜன் என்பவரது, 40 தென்னை மரங்களை சேதப்படுத்தின.இந்த யானைகள், வரும் பிப்., மாதம் வரை, ஓசூர் வனக்கோட்-டத்தில் முகாமிட்டிருக்கும். விவசாய பயிர்களை யானைகளிடமி-ருந்து காப்பாற்ற போராடும் விவசாயிகள், அவைகளை, கர்நாடகா-விற்கு விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.