உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தாக்க வந்த மகனை வெட்டிய தந்தை கைது

தாக்க வந்த மகனை வெட்டிய தந்தை கைது

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சின்ன பண்டப்பள்ளியை சேர்ந்தவர் சாத்தப்பன், 37, கூலி தொழிலாளி. இவரது தந்தை திம்மப்பா, 60. தந்தைக்கு தெரியாமல், 4.5 ஏக்கர் பரம்பரை சொத்தில், 3.5 ஏக்கருக்கு போலி சான்றிதழ் தயாரித்து, தன் பெயரில் சாத்தப்பன் ஆவணம் செய்தார்.இதையறிந்த திம்மப்பா வருவாய் துறையினர் உதவியுடன் ஆவணத்தை ரத்து செய்தார்.இதனால் ஆத்திரமடைந்த சாத்தப்பன், இரவில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த தந்தையை, கட்டையால் தாக்க முயன்றார். சத்தம் கேட்டு கண் விழித்த திம்மப்பா சுதாரித்து, தாக்க வந்த மகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த சாத்தப்பன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் புகார் படி, உத்தனப்பள்ளி போலீசார், திம்மப்பாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை