உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயிகளுக்கு வயல் விழா பயிற்சி

விவசாயிகளுக்கு வயல் விழா பயிற்சி

ஓசூர், ஓசூர் வட்டார விவசாயிகளுக்கு, வேளாண் துறை அட்மா திட்டம் சார்பில், தேவிசெட்டிப்பள்ளி கிராமத்தில் வயல் விழா பயிற்சி நடந்தது. ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். அதியமான் வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் கீர்த்தனா, மண் மாதிரி சேகரிப்பு, மண் வள மேலாண்மை, ஊட்டசத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை, இயற்கை உரங்கள் தயாரிப்பு, பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கமளித்தார்.ஓசூர், துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், ஊட்டமேற்றிய தொழு உரத்தின் முக்கியத்துவம், மண்புழு உரம் தயாரிப்பு, கிசான் திட்டம் பற்றியும், உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேஷ், வரப்பு பயிர் முக்கியத்துவம், துவரை நாற்று நடவு சாகுபடி, காட்டுப்பன்றியை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்தும் எடுத்துரைத்தனர். வட்டார தொழில்நுட்ப மேலளார் சுகுணா, உதவி தொழில்நுட்ப மேலாளர் காவியா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ