உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வரலாறு பற்றிய புரிதலை ஏற்படுத்த 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுலா

வரலாறு பற்றிய புரிதலை ஏற்படுத்த 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுலா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் வருடாந்திர செயற்குழு கூட்டம், நேற்று மாவட்ட அருங்காட்சியகத்தில் நடந்தது. தலைவர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார்.கூட்டத்தில், 2 மாதங்களுக்கு ஒரு முறை, 'வரலாறும் வடையும்' என்ற கலந்துரையாடல் சந்திப்பு நடத்த வேண்டும். ஆய்வுக்குழுவின் முதலாவது மரபு நடையை மகளிர் தினத்தன்று முழுக்க பெண்களைக் கொண்டு நடத்த வேண்டும். மாணவர்களிடம் வரலாற்று ஆர்வத்தையும், வரலாறு பற்றிய புரிதலையும் ஏற்படுத்த, 3 மாதங்களுக்கு ஒரு முறை, 8ம் வகுப்பு மாணவர்களை தேர்ந்தெடுத்து, ஒரு நாள் வரலாற்று சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அலுவலர் பரந்தாமன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை