உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆடிட்டர் வீட்டில் தீ: பல லட்சத்துக்கு சேதம்

ஆடிட்டர் வீட்டில் தீ: பல லட்சத்துக்கு சேதம்

ஓசூர்: ஓசூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து, அரசு மருத்துவமனை செல்லும் பழைய தொலைபேசி அலுவலக சாலையில் வசிப்பவர் பேட்டராயசாமி, 66, ஆடிட்டர்; இவர் வீட்டின் தரைதளத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். நேற்று மாலை வீட்டின் தரைதளத்தில் தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ, கரும்புகையுடன் முதல் மற்றும் 2வது தளத்திற்கும் பரவியது. ஓசூர் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டிற்குள், 2 சமையல் சிலிண்டர்கள் இருந்தன. அதை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக அப்புறப்படுத்தினர். நீண்ட நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இந்த திடீர் தீ விபத்தில், பல முக்கிய ஆவணங்கள், துணிகள், பொருட்கள் உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. ஓசூர் டவுன் போலீசார் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !