ஓசூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ
ஓசூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீஓசூர், செப். 26-ஓசூர் மாநகராட்சி, 45 வார்டுகளில் தினமும், 125 டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில், மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மாநகராட்சியில் ஆங்காங்கு உள்ள நுண்ணுயிர் செயலாக்க மையத்திற்கும், பேரண்டப்பள்ளி அருகே உள்ள தாசேப்பள்ளி தின்னா பகுதிக்கும் அனுப்பப் படுகின்றன.தாசேப்பள்ளி தின்னாவில் மட்டும், 10 டன்னுக்கு மேல் குப்பை கொட்டப்பட்டுள்ளன. இதில், நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஓசூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கரும்புகை வெளியேறியதுடன், அதிகளவு குப்பை இருந்ததால், தீயை அணைக்க நீண்ட நேரமானது. ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், மாநகர நல அலுவலர் பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர். குப்பை கிடங்கு அருகே கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றவர்கள், குப்பை கிடங்கிற்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.