உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு

பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி :சாமியாபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில், பள்ளி மாணவ மாணவியருக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு, ஒத்திகை பயிற்சி தலைமை ஆசிரியர் விஜய் தலைமையில் நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வீரர்கள், தென்மேற்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் தங்களையும் பிறரையும் எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்தும், ஒருவரை பாம்பு கடித்தால் எப்படி காப்பாற்றுவது, தண்ணீரில் மூழ்கியவரை மீட்பது, காஸ் அடுப்பில் கசிவு ஏற்படும் போது எவ்வாறு செயல்படுவது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை