உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மீன் உணவு பொருட்கள் தயாரிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

மீன் உணவு பொருட்கள் தயாரிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

ஒகேனக்கல், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின், 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் மூலம் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்களுக்கான சிறப்பு மாற்று வாழ்வாதாரம் திட்டத்தில் மதிப்பு கூட்டிய உடன் உண்ணக்கூடிய மீன் உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி ஒகேனக்கல் அரசு மீன் பண்ணை பயிற்சி நிலையத்தில் நடந்து வருகிறது.இப்பயிற்சி, நேற்று முதல், நவ., 11ம் தேதி வரை, 13 நாட்கள் நடக்கிறது. இப்பயிற்சியின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயத்தொழில் தொடங்க வழிவகை ஏற்படுத்தப்பட்டு வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.இப்பயிற்சியில் மீன்களில் உள்ள உயிர் சத்துக்கள், தாது சத்துக்கள் மற்றும் செய்முறை விளக்கமாக மீன் கட்லெட், மீன் மசாலா கருவாடு, மீன் பஜ்ஜி, மீன் சமோசா, மீன் பர்கர், மீன் ரோல், மீன் ஊறுகாய், மீன் வடகம் உள்ளிட்ட செய்முறை விளக்கங்கள் பயிற்சி நடக்க உள்ளது. இந்த பயிற்சி முடிவில் தேர்வுகள் நடத்தப்பட்டு பின், மீன்வளத்துறை மூலமாக சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.தர்மபுரி மாவட்ட மீன்வள உதவி இயக்குனர் விஜயராகவன் தலைமையில் பயிற்சி தொடங்கியது. இதில், 28 பேர் கலந்து கொண்டனர். இதில் தலைமையிட மீன்வள ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் மீன்வள ஆய்வாளர்கள் கோகிலவாணி, வேலுச்சாமி, சார் ஆய்வாளர் திருப்பதி மற்றும் மீன்வள மேற்பார்வையாளர்கள், மீன்வள உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை