உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / உயர் கோபுர கம்பத்தில் மின்விளக்கு பொருத்தம்

உயர் கோபுர கம்பத்தில் மின்விளக்கு பொருத்தம்

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், ஆவத்துவாடி பஞ்.,க்கு உட்பட்ட, சுண்டகாப்பட்டி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் பஸ் ஸ்டாப் பகுதியிலுள்ள நிழற்கூடம் அருகே, கடந்த, 2021-2022ல் உயர் கோபுர மின் விளக்கு கம்பம் அமைத்து, அதன் மூலம், மக்கள் இரவு நேரங்களில் பயன்பெற்று வந்தனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், பழுதான மின்விளக்குகளை மாற்ற, அவற்றை அகற்றிய நிலையில், அதன்பின் மின்விளக்கு பொருத்தாமல், உயர் கோபுர மின்கம்பம் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது என, கடந்த, 18ல் நம் 'காலைக்கதிர்' நாளிதழில், செய்தி, படம் வெளியானது. இதையடுத்து, பஞ்., நிதியிலிருந்து, அந்த உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தில், மின்விளக்கு பொருத்தப்பட்டது. இருளில் மூழ்கி கிடந்த கிராமம், தற்போது வெளிச்சத்தில் மிளிர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !