கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்
கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை மற்றும் கடந்த வாரம் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.தொடர்ந்து, கே.ஆர்.பி., அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. நேற்று, 6,516 கனஅடி நீர் திறக்கப்பட்டதால் கே.ஈச்சம்பாடி தடுப்பணையில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. தடுப்பணைக்கு பொதுமக்கள் செல்ல, பொதுப்பணித் துறையினர் தடை விதித்துள்ளனர். அதே போல், இருமத்துார் முதல், டி.அம்மாபேட்டை வரையுள்ள தென்பெண்ணையாற்று கரையோர கிராம மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில், தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.