பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பிளஸ் 1 படிக்கும், 105 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில், அரூர் நகராட்சி தலைவர் இந்திராணி, வார்டு கவுன்சிலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.