உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் ஒன்றியம் சுண்டே குப்பம் பஞ்., நாட்-டாமை கொட்டாய் அரசு பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில், கலைஞரின் இலவச மருத்துவ முகாம், பஞ்., தலைவர் எல்லம்மாள் சிவகுமார் தலைமையில் நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மணிமேகலை வரவேற்றார். வட்-டார மருத்துவ அலுவலர் தாமரை செல்வி, டாக்டர் சோமசுந்தரம் ஆகியோர் பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி பேசினர். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாரா-யணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி