உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இலவச மருத்துவ முகாம்..

இலவச மருத்துவ முகாம்..

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகரில், ஓசூர் கேலக்சி அரிமா சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை, தனியார் பார்-மசி ஆகியவை சார்பில், இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதை, ஓசூர் மாநக-ராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்-வரன் துவக்கி வைத்தார். நுாற்றுக்கும் மேற்-பட்டோர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பொது மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்-டனர்.நோய் பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்-பட்டு, சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் ரவி மற்றும் மகேஸ்வரன், அரிமா சங்க நிர்வாகிகள் வேலா-யுதம், சண்முகம் மற்றும் சாரதி, தாமரை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !