உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊக்கத்தொகையுடன் இலவச தையல் பயிற்சி

ஊக்கத்தொகையுடன் இலவச தையல் பயிற்சி

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 18 முதல், 35 வயது வரை உள்ள, 8ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய இலவச தையல் பயிற்சியை வழங்கி வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி யு.டி.ஐ., டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து, 45 நாட்கள் இலவச தையல் பயிற்சியை துவங்கியது.மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் பன்னீர் செல்வம் குத்துவிளக்கேற்றி பயிற்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு இலவச தையல் பயிற்சியை வழங்குகிறது. பயிற்சி முடிந்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றது. இச்சான்றிதழை வைத்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பை பெறலாம். அல்லது சுயமாகவும் தொழில் துவங்கலாம். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்,'' என்றார்.யு.டி.ஐ., டிரஸ்ட் நிர்வாக இயக்குனர்கள் கிருஷ்ணன், திவ்யா உள்பட, 30 பெண்கள் பங்கேற்றனர். மொத்தம், 150 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளதால், தையல் பயிற்சி பெற விருப்பம் உள்ள பெண்கள், 88387 88634, 97870 25802 என்ற எண்களில் தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ