சிறுமி கர்ப்பம்; டிரைவருக்கு 20 ஆண்டு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவியை சேர்ந்த டிரைவர் லட்சுமணன், 27. இவரது அண்ணன் மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியுடன் லட்சுமணன் பழகியதில் சிறுமி கர்ப்பமானார். திருமணம் செய்து கொள்ள மறுத்தார். சிறுமியின் உறவினர்கள் புகாரில், கல்லாவி போலீசார் கடந்த, 2022 ஜூலை 26ல், லட்சுமணனை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி சுதா, குற்றஞ்சாட்டப்பட்ட லட்சுமணனுக்கு, 20 ஆண்டு சிறை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.