உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை செயல்படுத்தும் அரசு

விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை செயல்படுத்தும் அரசு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், உழவர் தின விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், நிருபர்களிடம் கூறியதா-வது:விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும் உரிமையை கூட்டுறவு சங்-கங்கள் இழந்துள்ளன. அமைச்சர் பெரிய கருப்பன், ரிசர்வ் வங்கி விதியை பின்பற்றி, 'சிபில் ஸ்கோர்' பற்றி கேட்க மாட்டோம் என கூறுகிறார். ஆனால், கூட்டுறவு சங்க பதிவாளர், 'சிபில் ஸ்கோர்' உறுதி செய்த பின் தான் கடன் கொடுக்க முடியும் என, சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதை தமிழக முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.ஆந்திரா அரசு அங்கு, 4 ரூபாய் மானியம் கொடுத்து, 'மா' கொள்-முதல் செய்கிறது. இங்கு மாங்கூழ் தொழிற்சாலைகள் திறக்கவில்லை. கடந்த ஆட்சியில் திறந்த குளிர்பதன கிடங்குகூட செயல்பாட்டுக்கு வரவில்லை.ஒட்டுமொத்தமாக விவசாயிகளை, தமிழக அரசு, கை கழுவி விட்டது. விவசாயி களுக்கு விரோதமான திட்டங்களை செயல்ப-டுத்துகிறது. விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு காய்கறிகளை வாங்கி, கொள்ளை லாபத்திற்கு விற்கிறார்கள்.அதை கண்காணிக்க வேண்டிய துறைகள் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஒட்டு மொத்த தமிழக விவ-சாயிகளும் வரும், 2026 தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக ஒருங்-கிணைந்து களமிறங்குவோம் என எச்சரிக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜிட் சிங் தல்லேவால், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமக-வுண்டர் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி