உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு

பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு

கிருஷ்ணகிரி,: பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில், 2023ம் ஆண்டு பட்டம் முடித்த மாணவ, மாணவியருக்கு, பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஐ.ஐ.டி.பி., இயக்குனர் டிபாபராடா தாஸ், 200 மாணவ, மாணவியருக்கு பட்டமளித்து பேசுகையில், ''பட்டம் என்பது நாம் பொறியியல் படித்ததற்கான ஒரு அங்கீ-காரம். அதை முறையாக பயன்படுத்தி நம் நாட்டிற்காக ஒவ்வொ-ருவரும் சாதனை படைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, நம் குடும்பத்திற்கும், ஊருக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை மாணவ, மாணவியர் மேற்-கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் பெற்ற பட்டத்திற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்பதை மாணவ, மாணவியர் மனதில் கொள்ள வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில், கல்லுாரி துணை முதல்வர் நபிஷாபேகம் மற்றும் அனைத்து துறை தலை-வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை