கிருஷ்ணகிரியில் இன்று பிரமாண்ட அரசு விழா ரூ.2,000 கோடியில் திட்டப்பணிகள், நல உதவிகள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இன்று நடக்கவுள்ள அரசு விழாவில், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.கிருஷ்ணகிரி, சென்னை சாலையில் அமைந்துள்ள அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் அரசு விழா இன்று (ஞாயிற்றுக்கி-ழமை) காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில் பங்கேற்க வரும், தமிழக முதல்வர் ஸ்டாலின், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். விழா மேடை அருகில் அமைக்கப்பட்டுள்ள, சிறப்பு கண்காட்சி அரங்குகளை பார்வையி-டுகிறார்.மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் உள்-ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களுடன் கலந்துரை-யாடுகிறார். அதன் பின் அவர், 2,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்ப-ணிகளை திறந்து வைத்தும், நல உதவிகளை வழங்கியும் பேசு-கிறார். முதல்வர் ஸ்டாலின் விமானத்தில் வந்து இறங்கும், ஓசூர் பேள-கொண்டப்பள்ளி தனேஜா ஏரோஸ்டேஸ் அண்ட் ஏவியேஷன் நிறுவனம் மற்றும் அரசு விழா நடக்கக்கூடிய கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லுாரி ஆகிய இடங்களை மையமாக கொண்டு, 2 கி.மீ., சுற்றளவில், 'சிவில் ட்ரோன்'கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்-டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை மீறி, 'ட்ரோன்'களை இயக்கும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.