உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேலுாரில் நாளை மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

வேலுாரில் நாளை மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:வேலுார் மண்டலத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்களின் குறைகள் கேட்கப்படுகிறது. மேலும் மனுக்களை பெறவும், உடனடியாக குறைகளை தீர்த்து வைக்கவும், உரிய ஆலோசனைகள் வழங்கவும், 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை, வேலுார் மண்டல அலுவலகத்தில் கூடி, மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும், உரிய தீர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 2024ம் ஆண்டின் மின்வாரிய ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நாளை (செப்.18) காலை, 11:00 மணிக்கு, வேலுார் மின் பகிர்மான வட்ட மத்திய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடக்கிறது. எனவே, மின்வாரியத்தில் இருந்து ஓய்வுபெற்ற அலுவலர்கள், பணியாளர்கள் இதில் பங்கேற்கலாம்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி