காரில் கடத்திய குட்கா பறிமுதல்
ஓசூர்: மத்திகிரி போலீசார் நேற்று முன்தினம் டி.வி.எஸ்., சோதனைச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா பன்ச் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காருக்குள், 21 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 40 கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில், பெரம்பலுார் மாவட்டம் பூலம்பாடியை சேர்ந்த வெங்கடேசன், 38 என்பவர் கர்நாடகாவில் இருந்து, புகையிலை பொருட்களை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.