மலர் வணிக வளாக கடைகள் ஒப்படைப்பு
ஓசூர், ஓசூர், பஸ் ஸ்டாண்ட் அருகே, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கோவில் நிதியில் இருந்து, 76 லட்சம் ரூபாய் மதிப்பில், 98 திண்டு கடைகளுடன் கூடிய மலர் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கடைகள் ஏலம் விடப்பட்ட நிலையில், 69 கடைகளை வியாபாரிகள் ஏலம் எடுத்துள்ளனர்.அவற்றை வியாபாரிகளுக்கு ஒப்படைக்கும் விழா நேற்று நடந்தது. மலர் வணிக வளாகத்தை, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் திறந்து வைத்து, கடைகளை வியாபாரிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து வியாபாரிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கோவில் செயல் அலுவலர் சின்னசாமி, கவுன்சிலர் மாரக்கா சென்னீரன் உட்பட பலர் பங்கேற்றனர்.