உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கு மீது 25ல் விசாரணை

ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கு மீது 25ல் விசாரணை

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 22வது வார்டு, தி.மு.க., கவுன்சிலரும், பொது சுகாதார குழு தலைவருமான மாதேஸ்வரன், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:ஓசூர் மாநகராட்சி சிறப்பு ஆர்.ஐ., சுரேஷ் கடந்த, 35 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார். அவர் முறைகேடுகள் மூலமாக, பல கோடி ரூபாய் சொத்துகளை ஓசூரில் வாங்கி குவித்துள்ளார்.சுரேஷ் மற்றும் அலுவலர்கள் கூட்டு சேர்ந்து, கிட்டத்தட்ட, 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் நிறைந்த மண்டலம்-1 பகுதியை, குடியிருப்பு பகுதியாக தொடர வைத்து, அதன் மூலம் தொழிற்சாலை அதிபர்களை பயனடைய வழிவகை செய்து, 13 ஆண்டுகளாக முறைகேடு செய்துள்ளனர். அதன் மூலம் மாநகராட்சிக்கு, 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல முறைகேடுகளை செய்து, மாநகராட்சிக்கு தவறான வழிகாட்டுதல் செய்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.இந்த புகார் மீது வரும், 25ம் தேதி விசாரணை நடக்க உள்ளது. மாநகராட்சி கமிஷனராக உள்ள முகம்மது ஷபீர் ஆலம், உரிய ஆவணங்கள், அறிக்கையுடன் வருகை தந்து விளக்கம் அளிக்க, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை