உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளி, மத்துாரில் சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி, மத்துாரில் சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி

போச்சம்பள்ளி, தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடிய நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை அமாவாசை என்பதால், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் புதியதாக மண் பானை மற்றும் நோன்பு கயிறுகள், அரசமரத்தின் விழுதுகள் உள்ளிட்டவைகளை சேகரித்ததுடன், அவரவர் வீட்டில் அதிரசம் உள்ளிட்ட பலகாரங்களை செய்து, படையலிட்டு, தீபாவளி நோன்பு எடுத்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.நேற்று காலை முதல், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்துார் சுற்று வட்டாரத்தில் மேகமூட்டத்துடன் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதை பொருட்படுத்தாமல் நோன்பு நிகழ்ச்சிக்கு தேவையான பூஜை பொருட்களை, கிராம மக்கள் போச்சம்பள்ளி, மத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாங்கி வந்து, தீபாவளி நோன்பை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை