உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

கிருஷ்ணகிரி: மார்கழி மாதத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படும். ஆனால், இந்தாண்டு மார்கழி மாதத்தில் லேசான பனிப்பொழிவு மட்டுமே இருந்த நிலையில், தை மாத பிறப்புக்கு பிறகு கிருஷ்ணகிரியில், காலை, மாலை கடுமையான பனியும், பகலில் கடுமையான வெப்பமும் பொதுமக்களை வாட்டி வருகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு, கிருஷ்ணகிரி நகரை சுற்றிலும், சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவும், பனி மூட்டமும் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி, மெதுவாக வாகனங்களை இயக்கினர். கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் சாலையோரம் இருந்த பொதுமக்கள் பலர் தீயை மூட்டி குளிர் காய்ந்தனர். ஏற்கனவே பொதுமக்கள் பலர் கடந்த, 15 நாட்களாக பனியால் சளி, இருமல், தொண்டை வலி உள்-ளிட்ட பல்வேறு உபாதைகளால், சிரமத்திற்குள்ளாகி வரும் நிலையில், நேற்று பெய்த பனியால் மேலும் சிரமப்பட்டனர். காலை, 9:00 மணிக்கு பின்னரே பனியின் தாக்கம் குறைய தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ