உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி, பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று காலை, 11:00 மணிக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலை வைத்து கணபதி ஹோமத்துடன் பூஜை செய்து, வழிபட்டனர். விநாயகருக்கு அபிஷேகம், சுண்டல், அவல் படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கினர். பின் சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் கரைத்தனர். இதில், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, இந்து முன்னணி கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில் மற்றும் பா.ஜ.,வினர், இந்து முன்னணியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ