மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
08-Nov-2025
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் தினமும் காலையில், யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று காலை, பொதுமக்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ஓசூர் டவுன் ஸ்டேஷனில் பணியாற்றும் காவலர் ஒருவர், சீருடை அணியாமல், சாதாரண உடையில் வந்து, பயிற்சி செய்பவர்களை மொபைல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். அதை பார்த்த இளைஞர்கள், தட்டி கேட்ட நிலையில், அவர் டவுன் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார்.அங்கு வந்த போலீசார், சந்துரு, விஷ்ணு, தேவராஜ் ஆகிய, 3 பேரை விசாரணை நடத்த ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். தகவலறிந்த, அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக மாநில இணைச்செயலாளர் விஷ்ணுகுமார், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ் மற்றும் ஹிந்து அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அதனால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, விசாரணைக்கு அழைத்து வந்த, 3 பேரையும் விடுவித்தனர்.
08-Nov-2025