உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டம்

பாலக்கோடு: பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முன், கண்களில் கறுப்பு துணி கட்டி கொண்டு, கவுரவ விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் கடந்த, 10 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்-பாமல், கவுரவ விரிவுரையாளர்களை வைத்து, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. தமிழக அரசு, தற்போது கவுரவ விரிவு-ரையாளர்களுக்கு, 25,000 ரூபாய் மட்டும் தொகுப்பூதியம் வழங்கி வருகிறது.ஆனால், யு.ஜி.சி., விதிமுறைப்படி மாதம், 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தமிழக அரசு அதனை ஏற்கவில்லை. இதை கண்டித்து, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில் பணி புரியும் கவுரவ விரிவுரையாளர்கள் சம்பள உயர்வு கேட்டு, கண்களில் கறுப்பு துணி கட்டி கொண்டு, நேற்று கல்லுாரி முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை