உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முதல்வர் கோப்பை வாலிபால் ஓசூர் தனியார் பள்ளி வெற்றி

முதல்வர் கோப்பை வாலிபால் ஓசூர் தனியார் பள்ளி வெற்றி

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், பள்ளிகளுக்கு இடையேயான மாணவியருக்கான வாலிபால் இறுதி போட்டியில், ஓசூர் யோகி வேமன்னா பள்ளி அணியும், ஜான் போஸ்கோ பள்ளி அணியும் மோதின. இதில், 25 - 17, 14 - 25, 15 - 5 என்ற செட் கணக்கில், ஓசூர் யோகி வேமன்னா பள்ளி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவியர், பயிற்சியாளர் மாணிக்கவாசகம் ஆகியோரை, பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ