உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ேஷர் ஆட்டோ வசதியின்றி தவிக்கும் ஓசூர் தொழிலாளர்கள்

ேஷர் ஆட்டோ வசதியின்றி தவிக்கும் ஓசூர் தொழிலாளர்கள்

ஓசூர், ேஷர் ஆட்டோ வசதி மாவட்ட தலைநகருக்கு மட்டுமே என அரசு கூறி வருவதால், ஓசூரில் வாழும் தொழிலாளர்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.தமிழக எல்லையான ஓசூர், கர்நாடகாவின் பெங்களூருக்கு மிக அருகாமையில் உள்ளதால், தொழில்துறை வளர்ச்சியில் வேகமெடுத்துள்ளது.இங்கு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை மற்றும் தென்மாவட்ட மக்கள், வட மாநில தொழிலாளர்கள் என, பல லட்சக்கணக்கானோர் தங்கியிருந்து வேலை செய்கின்றனர். ஓசூர் மேலும் வளர்ச்சி பெறும் வகையில், பன்னாட்டு விமான நிலையம் மற்றும் கர்நாடகாவிலிருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில், அறிவுசார் வழித்தடம் போன்றவற்றை ஏற்படுத்த தமிழக அரசு வேகம் காட்டுகிறது. ஆனால், மிகவும் எளிதாக செய்ய வேண்டிய ேஷர் ஆட்டோ வசதியை மட்டும் அரசு செய்து கொடுக்க மறுக்கிறது. மாவட்ட தலைநருக்கு மட்டுமே ேஷர் ஆட்டோ வசதி செய்யப்படும் என கூறி வருகிறது.மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியை காட்டிலும், ஓசூரில் தான் தொழிலாளர்கள் மற்றும் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. மேலும், மாவட்டத்தில் மொத்தமுள்ள, 6 சட்டசபை தொகுதிகளில், அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகவும் ஓசூர் உள்ளது.ஆனால், ேஷர் ஆட்டோ வசதி செய்து தர அரசு முன்வரவில்லை. அரசாணையின் சிறிது தளர்வு செய்து, ஓசூருக்கு விதிவிலக்கு என அறிவித்தால், ேஷர் ஆட்டோ வசதி கிடைக்கும். பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர். ஆனால், அரசு அதை கண்டுகொள்ளாததால், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மாநகராட்சி அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உட்பட பல இடங்களுக்கு செல்ல வேண்டிய தொழிலாளர்கள், மக்கள், சில கி.மீ., துாரத்திற்கே, 300 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது.அதனால், குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணத்தை இழந்து வருகின்றனர். அதனால், ேஷர் ஆட்டோ வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என, தொழிலாளர்கள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ