உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்புஊத்தங்கரை, டிச. 11-ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில், துணை தாசில்தார் சக்தி தலைமையில், மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.அப்போது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்த தக்க பண்பாட்டு சட்டங்களிலும், வரையறுக்க பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன். எவ்வித வேறுபாடுகள் இன்றி, அனைவரின் மனித உரிமைகளை பாதுகாத்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகின்ற எந்தவித செயலையும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என, உறுதிமொழி ஏற்றனர். இதில், அலுவலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி