ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களில் தகுதியானவை மீது உடனடி நடவடிக்கை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்து வரு-கிறது. அவ்வகையில், பெரியமுத்துார் உள்வட்டத்திற்கு உட்பட்ட பென்னேஸ்வரமடம், தளிஅள்ளி, மோட்டூர், மாரிசெட்டிஅள்ளி, பாலேகுளி, சுண்டேகுப்பம் உள்பட, 10 கிராமங்களுக்கான ஜமா-பந்தி நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 16 முதல் ஜமாபந்தி நடந்து வருகிறது. பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், உட்பிரிவு மாற்றம், வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன்-கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 75 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதன் மீது விசாரணை நடத்தி, தகுதியான மனுக்களின் மீது அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.நாளை (மே 27) பெரியமுத்துார் உள்வட்டத்திற்கு உட்பட்ட சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டஅள்ளி, தட்ரஅள்ளி, காவே-ரிப்பட்டணம் உள்வட்டத்திற்கு உட்பட்ட கத்தேரி உள்ளிட்ட பகு-திகளை சேர்ந்த, 10 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது. பொது-மக்கள் கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் வழங்கலாம். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, பட்டா, புறம்போக்கு பதிவேடு, தனிபட்டா, சிட்டா, பண வரவு பதிவேடு உள்ளிட்டவற்றை கலெக்டர் பார்-வையிட்டார்.