உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மதிய உணவின்றி மாணவியர் தவிப்பு

ஓசூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மதிய உணவின்றி மாணவியர் தவிப்பு

ஓசூர்: ஓசூரில் அரசு நிதியுதவி பெறும் புனித ஜான்போஸ்கோ மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு படிக்கும், 1,200 மாணவியரில், 450 க்கும் மேற்பட்டோர், தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தில், தினமும் மதிய உணவு சாப்பிடுகின்றனர். இந்நிலையில், பள்ளியில் பணியாற்றிய சமையல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் வயது முதிர்வால் பணி நிறைவு பெற்று விட்டனர். அந்த காலி பணியிடத்திற்கு இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. கடந்த, 10 ல் பள்ளிகள் திறந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, மாணவ, மாணவியர் சரியான மதிய உணவின்றி தவிக்கின்றனர். பள்ளி நிர்வாகம், ஒய்வுபெற்ற சமையலரை வைத்து, உணவு சமைக்க ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட கலெக்டர் சரயு, மாநகராட்சி கமிஷனர் சினேகா, மேயர் சத்யா ஆகியோருக்கு, பள்ளி நிர்வாகம் மனு கொடுத்துள்ளது. ஆனால், புதிய சமையல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்படவில்லை. ஏழ்மை நிலையிலுள்ள மாணவியர் படிக்கும் இப்பள்ளிக்கு, உடனடியாக சமையல் பணியிடங்களை நிரப்ப, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி