மேலும் செய்திகள்
உழவர் சந்தையில் கடைகளை அதிகரிக்க நடவடிக்கை தேவை
18-Sep-2024
ஓசூர்: ஓசூர் உழவர் சந்தை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள, 2 உழவன் அங்காடி கடைகள் பூட்டியே கிடப்பதால், அதன் தேவை மக்க-ளுக்கு கிடைக்காமல் உள்ளது.தமிழக எல்லையான ஓசூரில், தமிழகத்திலேயே மிகப்பெரிய உழவர் சந்தை இயங்குகிறது. இங்கு மொத்தம், 295 திண்டு கடைகள் உள்ளன. ஒரு நாளைக்கு, 107 டன் அளவிற்கு காய்க-றிகள், கீரை வகைகள், பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. அதி-கபட்சமாக, 16,000 நுகர்வோர் காய்கறி, பழங்கள் வாங்க வந்து செல்கின்றனர். உழவர் சந்தை வளாகத்தில் வலது, இடதுபுற சாலையோரம், நகர்புற நுகர்வோர் பயனடையும் வகையில், தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியம் மூலம், 2 உழவன் அங்காடி கடைகள் கட்டப்பட்டன. இதற்கு வாடகை நிர்-ணயம் செய்து, டெண்டர் விடாமல் இழுத்தடிப்பதால், கடந்த ஓராண்டிற்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. உழவர் சந்தை-களில் விற்பனை செய்வதை போன்று, தரமான வேளாண் விளை-பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், எளிதில் நகர்புற நுகர்வோரை சென்றடைய உழவன் அங்கவாடி கட்டப்-பட்டது. அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, இந்த உழவன் அங்-காடிகள் பயன்பாடின்றி உள்ளன. ஓசூர் பகுதி மக்கள் தற்போது, விவசாயிகள் சாகுபடி செய்யும் இயற்கை உணவு பொருட்களான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், வீட்டு தயாரிப்பு உணவு பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அவற்றை விரும்பி வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்-ளது. ஆனால், அதிகாரிகள் மெத்தனபோக்கால் உழவன் அங்-காடி எந்த தேவைக்காக ஆரம்பிக்கப் பட்டதோ அந்த தேவை நிறைவேறாமல் உள்ளது. இது, பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
18-Sep-2024