உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

வேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

ஓசூர், நவ. 3-ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது. காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாக சாலை பூஜை, நவகலச பூஜை, ஹோமங்கள், மாலை, 5:00 மணிக்கு சுப்பிரமணிய சஹஸ்ரநாம அர்ச்சனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும், 6 மாலை, 5:30 மணிக்கு சக்தி வேல் வாங்குதல் மற்றும் 7 மதியம், 3:30 மணிக்கு சூரசம்ஹாரம், 8 மதியம், 2:00 மணிக்கு வள்ளி, தெய்வானை வேல்முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி