உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

ஓசூர், ஓசூர் மாநகராட்சியில் ஏற்கனவே, சீத்தாராம் நகர், மூக்கண்டப்பள்ளி, அப்பாவு நகர், ஆவலப்பள்ளி, மத்திகிரி ஆகிய, 5 இடங்களில் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 50,000 பேருக்கு ஒரு சுகாதார நிலையம் என்ற அடிப்படையில், 37வது வார்டுக்கு உட்பட்ட டி.வி.எஸ்., எதிரே எஸ்.பி.எம்., காலனியில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.இங்கு ஒரு டாக்டர், 3 செவிலியர்கள், ஒரு லேப் டெக்னீஷியன் மற்றும் ஊழியர்கள் பணியில் இருப்பர். புதிய கட்டடத்தை வரும், 3ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி, ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர், மாநகர பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா ஆகியோர், புதிய நகர்புற சுகாதார நிலையத்தை நேற்று பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி