உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆசிரியர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

ஆசிரியர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

ஆசிரியர்களின் குறைகளை உடனுக்குடன்தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கிருஷ்ணகிரி, நவ. 5-கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை, 4:30 மணியளவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலகத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்த பயிற்சி முகாமில் ஆலோசனைகள் வழங்கினார்.தொடர்ந்து அலுவலர்களிடம், அமைச்சர் கூறியதாவது: மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் தடையின்றி கொண்டு சேர்க்க வேண்டும். மாணவர்களின் விபரங்களை, 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகள், குறைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் முற்றிலும் எழுத படிக்க தெரியாத, 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும். எழுத, படிக்க தெரியாதவர்கள் இல்லை என்ற நிலை உருவாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.சி.இ.ஓ., (பொ) முனிராஜ், மாவட்ட கல்வி அலுவலர் ராஜன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் வெங்கடேசன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், பள்ளி துணை ஆய்வாளர் சுதாகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். மேலும், ஓசூருக்கு சென்ற அமைச்சர் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை