காலை உணவு திட்டத்தில் காரம் குறைவாக சமைக்க அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், ஜாகிர் வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.பள்ளி குழந்தைகளிடம் காலை உணவு நன்றாக இருக்கிறதா என கேட்ட அவர், ஒரு தட்டில் தனக்கும் உணவு தரச்சொல்லி சாப்பிட்டு பார்த்தார்.மேலும் குழந்தைகளுக்கு காரம் குறைவாக, ருசியாக சமைத்து கொடுங்கள் எனக்கூறினார். தொடர்ந்து காலை உணவு தயாரிக்க, பயன்படுத்தப்படும் உணவு பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து பதிவேடுகளில் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி பி.டி.ஓ., உமாசங்கர், துணை பி.டி.ஓ., ராஜூ, மற்றும் சத்துணவு பணியாளர்கள் உடனிருந்தனர்.