தமிழக முதல்வர் வருகையின் போது விழா ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி, ''கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் வரும்போது, விழா ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்,'' என, அமைச்சர் சக்கரபாணி பேசினார்.தமிழக முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆக., 16 மற்றும் 17 தேதிகளில் வருகை தருகிறார். அதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் பணிகள் மற்றும் அரசின் திட்டங்கள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். கலெக்டர் தினேஷ்குமார், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆக., 3வது வாரத்தில் வருகை தருகிறார். அவர் ஓசூர் மாநகராட்சி அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகில் நடக்கும் அரசு விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து, அரசு விழாவை சிறப்பிக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா, ஓசூர் மாநகராட்சி கமிஷனர் முகமது ஷபீர் ஆலம், வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதாநவாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்