உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சமுதாய அமைப்பாளர் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சமுதாய அமைப்பாளர் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

  • சமுதாய அமைப்பாளர் காலி பணியிடத்துக்குவிண்ணப்பிக்க அழைப்புகிருஷ்ணகிரி, அக். 24-தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம், காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம், சமுதாய அமைப்பாளராக பணிபுரிய அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில், காலிப்பணியிடங்கள் இருப்பின், அவற்றை பூர்த்தி செய்துகொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மேற்படி பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அடிப்படை கணினி திறன் மற்றும் தகவல் தொடர்பு திறன்களுடன், பட்டதாரியாக இருக்க வேண்டும். சுய உதவிக்குழு, பகுதி அளவிலான கூட்டமைப்பில், குறைந்தபட்சம் ஒரு வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க, வேண்டும். பகுதி அளவிலான கூட்டமைப்பின் பரிந்துரை கடிதம் இருப்பின், தீர்மான நகல் இணைக்கப்பட வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகளுடன் கூடிய விண்ணப்பங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் (மகளிர் திட்டம்) வரும் நவ., 1க்குள் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை