உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீடுகள் மறு கட்டுமானம் பணி ஆணை வழங்கல்

வீடுகள் மறு கட்டுமானம் பணி ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் டவுன் பஞ்.,ல் வீடு மறு கட்டுமான திட்டப்பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, 94 பேருக்கு, 2.24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் மறு கட்டுமானம் செய்வதற்கான பணி ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், தி.மு.க., நகர செயலர் வெங்கடப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !